3 பேர் உயிரிழப்பு; தமிழகத்தில் 320 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 52 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 184 ஆண்கள், 136 பெண்கள் என மொத்தம் 320 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 89 பேரும், கோவையில் 45 பேரும், செங்கல்பட்டில் 36 பேரும், நீலகிரியில் 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
அரியலூர், மயிலாடுதுறை, தேனி, திருப்பத்தூரில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா உறுதி செய்யப்படவில்லை.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதில் 12 வயதுக்குட்பட்ட 38 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 53 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 லட்சத்து 50 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 943 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 447 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 176 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 2 பேரும், செங்கல்பட்டில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 36 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 9 பேர் கொரோனா நோய்தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 946 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 4 ஆயிரத்து 437 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story