திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவியிடங்கள் என்னென்ன?


திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவியிடங்கள் என்னென்ன?
x
தினத்தந்தி 3 March 2022 8:54 AM IST (Updated: 3 March 2022 8:54 AM IST)
t-max-icont-min-icon

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவியிடங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க., 23 வார்டுகளில் வென்றது. இந்திய கம்யூனிஸ்டு - 6, ம.தி.மு.க - 3, காங்கிரஸ் -2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ம.ம.க., தலா ஒரு வார்டு என வென்றுள்ளன. கூட்டணிக்கட்சியினரின் துணையுடன் தான் மேயர் பதவியை தி.மு.க.,வால் கைப்பற்ற முடியும்.

இந்த சூழலில், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி, இந்திய கம்யூ., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, நேற்று தகவல் வெளியானது. தேர்தலின் 'சீட்' பங்கீட்டின் போதே, இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளதால், இந்திய கம்யூ., கட்சி, துணை மேயர் பதவியை கைப்பற்றுவதாக, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன்படி இந்திய கம்யூ., கவுன்சிலர் ஆறு பேரில், மூன்று பேர், துணை மேயராக வாய்ப்புள்ளது. 

இந்நிலையில் திருப்பூர் துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. 

பவானி, புளியங்குடி, அதிராம்பட்டினம், போடிநாயக்கனூர் நகராட்சி துணைத்தலைவர் பதிவிகளும்,  4 பேரூராட்சி தலைவர்கள், 6 பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளும் சிபிஐக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Next Story