இந்தியாவில் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் கி.வீரமணி வலியுறுத்தல்
‘மாணவர்கள் மருத்துவ படிப்புக்காக வெளிநாடு செல்வதை தடுக்க இந்தியாவில் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்’, என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
மருத்துவ படிப்பு படிக்க இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இந்திய மாணவர்கள் அதிகம் செல்ல காரணம் என்ன? என்பதை சிந்திக்க வேண்டும். ‘நீட்’ தேர்வை ஒழித்து அதிக மருத்துவ கல்லூரிகளை இந்தியாவில் உருவாக்கினால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தகுதி - திறமைக்கு அளவுகோல் ‘நீட்’ அல்ல.
அதேபோல வெளிநாடுகளுக்கு மாணவர்கள் செல்லாமல் தடுத்து அதற்கான பொருளாதாரம் உள்நாட்டிலேயே புழங்கவும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும். நம் மாணவர்களை காப்பாற்ற ஒரு நிரந்தர வழி இதன்மூலம் ஏற்படும்.
‘நீட்’ தேர்வின்றி அந்தந்த மாநில அரசுகளின்கீழ் மேலும் பல மருத்துவ கல்லூரிகளை அமைத்திடுவது அவசர அவசியமானதாகும். இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளை பெருக்கிவிட்டால் ரஷியா, பிலிப்பைன்ஸ், சீனா, உக்ரைன், எஸ்டோனியா போன்ற பல நாடுகளுக்கு நமது மாணவர்கள் செல்லவேண்டிய நிலையே இருக்காது. இந்தியாவிலேயே படியுங்கள் என்று சொல்வதோடு நிறுத்தி கொள்ளாமல் ‘நீட்’ தேர்வை ரத்து செய்து அனைவருக்கும் வாய்ப்பளித்தால் மருத்துவர்களின் எண்ணிக்கை பல்கி பெருக வாய்ப்பு உண்டு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
கி.வீரமணி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘திருச்சி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் அகில இந்திய தொகுப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் என்று உத்தரவு பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள். சமூகநீதி வரலாற்றில் அரியதோர் சாதனை நிகழ்த்தி மற்ற மாநிலங்களுக்கும் முன்னோட்டமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகம் தான் இப்படி வழிகாட்டியுள்ளது. மற்ற மாநிலங்களில் இப்படிப்பட்ட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :
Next Story