கிணற்றுக்குள் சரக்கு ஆட்டோ பாய்ந்து தம்பதி பலி


கிணற்றுக்குள் சரக்கு ஆட்டோ பாய்ந்து தம்பதி பலி
x
தினத்தந்தி 4 March 2022 1:50 AM IST (Updated: 4 March 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

சாலையோர கிணற்றுக்குள் சரக்கு ஆட்டோ பாய்ந்து தம்பதி பலியானார்கள். அவர்களது மகள் உயிர் தப்பினாள்.

திருப்பூர்,

கரூர் மாவட்டம் ஆவுத்திபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 52). மேடை, பந்தல் அமைப்பாளர். இவரது மனைவி பானுமதி (48). இவர்களது ஒரே மகள் அகல்யா (12).

நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்டம் சின்னமுத்தூர் செல்வக்குமாரசாமி கோவில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அருகில் உள்ள மோளக்கவுண்டன்புதூரில் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக வடிவேல் மேடை, பந்தல், மின்னொளி அமைத்து கொடுத்தார். உதவிக்கு தனது மனைவி, மகளையும் அழைத்து சென்றிருந்தார்.

பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு நிகழ்ச்சி முடிந்த உடன் மேடை, பந்தலை பிரித்து பொருட்களை ஒரு லாரியில் ஏற்றி வடிவேல் அனுப்பி வைத்தார். பின்னர் நேற்று காலை 6 மணி அளவில் சரக்கு ஆட்டோவில் ஜெனரேட்டரை ஏற்றிக்கொண்டு மனைவி மற்றும் மகளை உடன் அழைத்துக்கொண்டு வடிவேல் ஊருக்கு புறப்பட்டார்.

கிணற்றில் பாய்ந்த ஆட்டோ

சரக்கு ஆட்டோ முத்தூர்-ஊடையம் சாலை சென்னாக்கல்மேடு பஸ் நிறுத்தம் அருகில் காலை 7 மணிக்கு வந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரத்தில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. 70 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 60 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது.

கிணற்றுக்குள் சரக்கு ஆட்டோ பாய்ந்ததில் வடிவேல், பானுமதி இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிணற்றின் தடுப்புச்சுவரில் மோதியபோது ஆட்டோவின் முன் பக்க கண்ணாடி உடைந்ததால் சிறுமி அகல்யா மட்டும் அதன் வழியாக தண்ணீரில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார்.

Next Story