திருப்பூர்; அடகு கடையில் 3 கிலோ தங்க நகை கொள்ளை...!


திருப்பூர்; அடகு கடையில் 3 கிலோ தங்க நகை கொள்ளை...!
x
தினத்தந்தி 4 March 2022 4:08 PM IST (Updated: 4 March 2022 4:08 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் அடகு கடையில் 3 கிலோ தங்க நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம்  யூனியன் மில் சாலை அருகே ஜெயகுமார் என்பவர் அடகு கடை வைத்து நடத்திவருகிறார். இந்த நிலையில் நேற்று இரவி வேலையை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்று உள்ளார்.

பின்னர் இன்று காலை மீண்டும் கடையை திறப்பதற்காக ஜெயகுமார் வந்து உள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விரைந்து சென்று கடைக்குள் பார்த்து உள்ளார்.  அப்போது கடையில் இருந்த 3 கிலோ தங்க நகை கொள்ளை போனது தெரியவந்தது. 

இது தொடர்பாக ஜெயக்குமார் அளித்த தகவலின் போரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story