வாலிபர் உயிரிழப்பில் தந்தை-மகன் கைது - போலீசார் விசாரணை


வாலிபர் உயிரிழப்பில் தந்தை-மகன் கைது - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 March 2022 1:31 PM IST (Updated: 5 March 2022 1:31 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் தந்தை மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம், 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விசலூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருக்கு சந்தோஷ்ராஜ் (22). பிருத்திவிராஜ் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று சந்தோஷ்ராஜ் அப்பகுதியை சேர்ந்த ஒரு லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது தந்தை சவுந்தரராஜன் தனது மகன் பிருத்திவிராஜன் அங்கு சென்று சந்தோஷ்ராஜை அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது சந்தோஷ்ராஜை அவரது தந்தை சவுந்தரராஜன் மற்றும் பிருத்திவிராஜ் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சந்தோஷ்ராஜ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாச்சியார்கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரராஜன் மற்றும்  பிருத்திவிராஜனை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story