ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை ; 2 பேர் கைது
கோவையில் ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை,
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்னை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை தொடர்ந்து காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர வெள்ளி ராஜ் ஆகியோர் கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு உள்ள ஒரு பொது கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை செய்த சரவணம்பட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (23 ) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவரிடமிருந்து 1 கிலோ 350 கிராம் எடையுள்ள கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதே போல் சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்ச் செல்வன் கணபதி உடையாம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சின்னவேடம்பட்டியை சேர்ந்த சிவபிரசாத் ( 22) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 1, 100 கிராம் எடையுள்ள கஞ்சா கைப்பற்றினர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து, குறிப்பிட்ட இடத்துக்கு கல்லூரி மாணவர்களை வரவழைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தெரியவந்தது.
பின்னர் அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story