உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவர்களிடம் இனப்பாகுபாடு; கொடைக்கானல் மாணவி குற்றச்சாட்டு...!
உக்ரைனில் இருந்து திரும்பும் மாணவ-மாணவிகளிடம் இனப்பாகுபாடு பார்க்கப்படுவதாக நாடு திரும்பிய கொடைக்கானல் மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
கொடைக்கானல்,
உக்ரைன்- ரஷியா இடையே 11-வது நாளாக போர் நடந்து வருகின்றது. இந்த போரால் இரு தரப்பிலும் பொது மக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்த பேரழிவை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பல நாடுகள் முயற்சி செய்துவருகின்றது. ஆனால் இந்த முயற்சிகள் ரஷியாவை சமாதானப்படுத்த வில்லை. இதன் விளைவாக ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்து வருகின்றது.
இதனால் அங்கு உள்ள தங்கள் நாட்டு மக்களை மீடுட்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டிவருகின்றது. அந்த வகையில், மருத்துவ படிப்பிற்காக உக்ரைன் சென்ற மாணவர்களை மீட்க இந்தியா தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இந்த முயற்சியின் மூலம் பல மாணவர்கள் தாயகம் திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கி தவித்துவந்த கொடைக்கானலை சேர்ந்த மருத்துவ மாணவி அனுசியா மோகன் தற்போது நாடு திரும்பி உள்ளார்.
மருத்துவ மாணவி அனுசியாவிடம் உக்ரைனின் நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் கூறியதாவது,
உக்ரைனில் உள்ள மாணவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகின்றது. மீட்பு பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். தற்போது நாடு திரும்பும் மாணவ-மாணவிகளிடம் இனப்பாகுபாடு பார்க்கின்றனர். மேலும் வட மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்படுகின்றது.
அறிவிப்புகள் அனைத்தும் இந்தியில் அறிவிக்கப்படுவதால் தென்னிந்திய மாணவர்கள் தவித்து வருவகின்றனர். கழிவறையை சுத்தம் செய்தால் தான் விமானத்தில் இருக்கைகள் ஒதுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Related Tags :
Next Story