உக்ரைனில் சிக்கி தவித்த 35 மாணவர்களை தமிழக அரசு மீட்டது
உக்ரைனில் சிக்கி தவித்த 35 மாணவர்களை தமிழக அரசு மீட்டது. அவர்கள் பிசோஜின் நகரில் இருந்து ருமேனியா எல்லையை அடைவதற்கான பஸ் கட்டணத்தை சென்னையில் உள்ள வங்கி கிளை மூலம் செலுத்தியது.
சென்னை,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இதனால் உக்ரைனில் வசிக்கும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து மருத்துவம் படிப்பதற்காக சென்ற மாணவர்கள் உக்ரைனில் இருந்து தாயகம் அழைத்து வரப்பட்டு வருகின்றனர். உக்ரைனில் இருந்து வெளியேறி ருமேனியா, ஹங்கேரி, சுலோவேகியா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கு திருச்சி சிவா எம்.பி. தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ. மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இதற்கிடையே உக்ரைனில் உள்ள போர் பகுதியான பிசோஜின் நகரில் 35 மாணவர்கள் சிக்கி தவித்தனர். அந்த 35 மாணவர்களும் ருமேனியா நாட்டின் எல்லையான தெர்னோபில்லை அடைவதற்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவம் படித்த, ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ஏ.பி.விஜயகுமார் அங்குள்ள ஏஜெண்டு மூலம் பஸ் ஏற்பாடு செய்து கொடுத்தார். இதற்கான கட்டணத்தை தமிழக அரசு செலுத்தியது.
கட்டணம் செலுத்திய தமிழக அரசு
பிசோஜினில் இருந்து ருமேனியா எல்லையை அடைவதற்கு ஒரு மாணவருக்கு பஸ் கட்டணமாக தலா ரூ.38 ஆயிரத்து 212 என 35 மாணவர்களுக்கு ரூ.13 லட்சத்து 37 ஆயிரத்து 446 தமிழக அரசு கொடுத்திருக்கிறது. இந்த பணம் சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலமாக உக்ரைனில் உள்ள பஸ் ஏஜெண்டுக்கு அனுப்பப்பட்டது. தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுத்த பஸ் மூலமாக தமிழக மாணவர்கள் 35 பேர் ருமேனியாவை அடைந்துள்ளனர். அங்கிருந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுகின்றனர்.
தமிழக மாணவர்கள் அழைத்து வரப்பட்ட பஸ்சில் இந்தியாவின் வேறு சில மாநிலங்களை சேர்ந்த மாணவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இதுகுறித்து கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு படித்து வரும் சாகித் ஷெரீப் என்ற மாணவர் கூறும்போது, ‘‘பிசோஜின் நகரில் இருந்து எப்போது கிளம்புவோம் என்று நான் மிகுந்த அச்சத்தில் இருந்தேன். இதனால் தூக்கம் இன்றி தவித்தேன். இப்போது ஆறுதல் அடைந்துள்ளேன். தமிழக அரசின் முயற்சி பாராட்டுக்குரியது’’ என்றார்.

Related Tags :
Next Story