“முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும்” - முதல்-அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்


“முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்ட அனுமதிக்க வேண்டும்” - முதல்-அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 March 2022 10:33 AM IST (Updated: 8 March 2022 10:33 AM IST)
t-max-icont-min-icon

முதிர்ந்த நிலையில் உள்ள ரப்பர் மரங்களை வெட்ட அனுமதி அளிக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது முதல்-அமைச்சரை சந்தித்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், முதிர்ந்த நிலையில் உள்ள ரப்பர் மரங்களை வெட்ட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து முதல்-அமைச்சருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் வசந்த எம்.பி., வனப்பாதுகாப்பு சட்டம் காரணமாக முதிர்ந்த ரப்பர் மரங்களை வெட்ட அதிகாரிகள் அனுமதி வழங்க மறுப்பதாகவும், இது தொடர்பாக முதல்-அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். 

Next Story