குடும்பத் தலைவிகளின் பெயரில் வீடு: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
கட்டணமில்லா பேருந்து பயணத்தின்போது பெண்களின் முகத்தில் தோன்றும் மலர்ச்சிதான், என் வாழ்நாளின் மகிழ்ச்சி என முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மகளிரணி இணையதளத்தை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு திமுக பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. கல்வியில் ஆண்களை விட பெண்களே தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளோம். பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது திமுக அரசு.
கட்டணமில்லா பேருந்து பயணத்தின்போது பெண்களின் முகத்தில் தோன்றும் மலர்ச்சிதான், என் வாழ்நாளின் மகிழ்ச்சி. பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை திமுக ஆட்சிதான் வழங்கியது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் வீடுகள் இனி குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும்” என்றார்.
Related Tags :
Next Story