தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் திட்டத்திற்கு ரூ.5.66 கோடி ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை
இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் 2 ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை,
இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறன்களை மேம்படுத்தி பயன்படுத்தும் ‘புத்தாய்வு திட்டம்’ குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதல்-அமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் இந்த புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு 5.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story