ஈரோட்டில் 1200 ரூபாயை தாண்டிய மல்லிகை பூ விலை
சுபமுகூர்த்தம் எதிரொலியால் ஈரோடு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிகளில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுதினம் சுபமுகூர்த்த நாட்கள் உள்ளதால் திருமண விசேஷங்களுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூவின் விலை இருமடங்கு அதிகரித்து காணப்பட்டது. நேற்று மல்லிகை பூ, கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 1,200 ரூபாயை தாண்டி விற்பனையானது. பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story