அண்ணா பல்கலையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - விஜயகாந்த்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 13 March 2022 1:29 PM IST (Updated: 13 March 2022 1:29 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் சுமார் 400-க்கும் மேற்பட்ட, தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என அமைச்சர் அவர்கள் கூறினாலும், காலதாமதமின்றி விரைவில் அதனை அமல்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுமார் 400-க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி விட்டு, அவுட்சோர்சிங் முறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் புதிய ஊழியர்களை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. 

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Next Story