கணவனை காணவில்லை என்று போலீசாரிடம் புகார் கொடுத்த மனைவி...!
கணவனை காணவில்லை என்று மனைவி போலீசாரிடம் புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உப்பிலியபுரம்,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அருகே உள்ள கோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் மார்டின் (வயது40) . மனைவி பூங்கொடி (35).
இந்த நிலையில் கணவன் மார்டின் நேற்று வீட்டை விட்டுச் சென்ற உள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை என்று கூறுப்படுகின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி பூங்கொடி கணவரை பல இடங்களில் தேடி உள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை என்று தெரிகின்றது.
இதனால் கணவனை கண்டுபிடித்து தரக்கோரி உப்பலியபுரம் போலீசாரிடம் மனைவி புகார் அளித்து உள்ளார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து மார்டினை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது மார்டின் அணிந்திருந்த சட்டை மட்டும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் போலீசார் மத்தியிம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிர்படுத்தினர். அப்போது மது போதையில் படுத்திருந்த மார்டினை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக அவரது மனைவிக்கு தகவல் கொடுத்த போலீசார், கணவன் மார்டினை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story