சென்னையில் அரிவாளுடன் சுற்றிய நெல்லை ரவுடிகள்...!
சென்னையில் அரிவாளுடன் சுற்றிய நெல்லை ரவுடிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் போலீசார் இரவு நேரங்களில் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நுங்கம்பாக்கம் மேயர் சிவசண்முகம் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை மடக்கினர்.
போலீசார் காரை மறிப்பதை முன்கூட்டியே அறிந்துக்கொண்டு காரில் இருந்த 5 பேர் வேகமாக இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
டிரைவர் மட்டும் காரில் இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை பிடித்து வைத்து, காரை சோதனையிட்டனர். காரில் 2 அரிவாள் இருந்தது. பின்னர் காரை பறிமுதல் செய்து, டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த செல்வமணி என்பது தெரிய வந்தது.
தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமா தேடி வருகின்றனர்.
நெல்லையை சேர்ந்த ரவுடிகள் சென்னையில் அயுதத்துடன் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story