காஞ்சிபுரம்: அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ...!
காஞ்சிபுரம் அருகே அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை சிப்-காட் பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இன்று ஞாயிற்று கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று தொழிற்சாலையின் உள்ளே இருந்து தீ பிடித்து புகை வெளியே வந்துள்ளது. இதை கண்ட தொழிற்சாலையின் காவலாளி ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள், தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 3-மணி நேரமாக போராடி அணைத்தனர்.
இன்று விடுமுறை என்பதால் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கபட்டது. ஆனாலும் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது
இந்த தீ விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story