வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெயிலில் இருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோடை வெயிலில் இருந்து விலங்குகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. பூங்காவை சுற்றிப்பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது பனிப்பொழிவு இருந்தாலும், இன்னும் சில வாரங்களுக்கு பிறகு கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பித்து கொள்வதற்காக பூங்கா நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பூங்காவில் மனித குரங்கு உள்ள இருப்பிடத்தில் குடை வடிவில் ‘ஷவா்’ அமைக்கப்பட்டுள்ளது. உச்சி வெயில் நேரத்தில் கூண்டில் இருந்து வெளியே வரும் மனித குரங்குகள், இந்த ‘ஷவரில்’ இருந்து கொட்டும் குளிர்ந்த நீரில் ஆனந்த குளியல் போட்டு தங்களது உடலில் உள்ள சூட்டை தணித்து கொள்கிறது. மேலும் மனித குரங்கு இருப்பிடத்தில் சிறிய குடில் அமைக்கப்பட்டு ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மனிதகுரங்கு தனது குட்டியுடன் ஊஞ்சலில் ஒய்யாரமாக அமர்ந்து பல்வேறு சேட்டைகள் செய்து பார்வையாளர்களை கவருகிறது. மனித குரங்குகளின் உடல் வெப்பத்தை தணிப்பதற்காக லஸ்ஸியும் தருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘ஷவரில்’ குளிக்கும் விலங்குகள்
இதே போல பூங்காவில் உள்ள யானைகள், ‘ஷவரில்’ குளித்து மகிழ்கின்றன. மேலும் பூங்கா ஊழியர்கள் வாளி மூலமும் தண்ணீரை வாரி யானைகளின் மீது ஊற்றுகின்றனர். யானைகளுக்கு தர்பூசணி பழங்கள் மற்றும் இளநீரை ஊழியர்கள் தருகின்றனர். இதனை யானைகள் விரும்பி சாப்பிடுகின்றன.
வெள்ளைப்புலிகள் இருக்கும் இடத்தில் சிறிய குளம்போல் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் தண்ணீர் விடப்பட்டுள்ளது. தாய்ப்புலி மற்றும் அதனுடைய புலிக்குட்டிகள் தங்களை வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்வதற்காக அடிக்கடி சிறிய தண்ணீர் தொட்டியில் விளையாடுகிறது. வெள்ளைபுலி கூண்டு அருகே ‘ஷவரும்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஷவரில்’் வெயில் நேரத்தில் வெள்ளைப்புலிகள் குளித்து விளையாடுகிறது.
வெள்ளைப்புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் போன்ற விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள இரும்பு கூண்டில் ஊழியர்கள் இரண்டு வேளையும் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளுக்கு ஐஸ் ஸ்கிப்பில் உறைய வைத்த இறைச்சி உணவுகள் வழங்கப்படுகிறது. இதேபோல காண்டாமிருகம் இருப்பிடத்தில் ‘ஷவர்’ அமைக்கப்பட்டுள்ளது. பறவைகள் வைக்கப்பட்டிருக்கும் கூண்டுகளுக்கு மேல் கோணி பைகள் போடப்பட்டு அதன் மீது ஊழியர்கள் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் குழாய் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். இதனால் பறவைகள் கூண்டு எப்போதும், குளிர்ச்சியாக காணப்படுகிறது.
கோடை வெயிலை சமாளிக்க ஏற்பாடு
சிறு கரடிகளின் இயற்கையான பண்புகளை வெளிக்கொணரும் வகையிலும், கோடை வெயிலை சமாளிக்கும் வகையிலும் சிறு கரடிகள் இருப்பிடத்தில் மரங்களிலிருந்து கீழே தொங்கும் வகையில் மண் பானைகளில் தேன் நிரப்பி துளைகள் இட்டு கீழே சொட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து சொட்டும் தேன் துளிகளை சிறுகரடிகள் ருசித்து பருகுகிறது.
நெருப்பு கோழி கூண்டிலும் ‘ஸ்பிரிங்க்லர்ஸ்” வைக்கப்பட்டு நாலாபுறமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இதனால் நெருப்பு கோழிகள் கூண்டு குளு, குளு என்று உள்ளது. பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகள், மான்கள், காட்டுமாடு, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங்குகள் கோடை வெயிலில் இருந்து தங்களை காத்து கொள்வதற்காக நவீன முறையில் அதனுடைய இருப்பிடங்களில் புல்லால் ஆன நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள விலங்குகள் அனைத்தும் இயற்கையான காடுகளில் வாழ்கிறோம் என்பதை உணரும் வகையில் பறவைகள் கூண்டுகளில் இயற்கையான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
பறவைகள் விளையாடுவதற்கு கூண்டுகளில் ஏணி உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாம்பு இல்லங்களில் அடைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு மேற்பகுதி மற்றும் உள்பகுதியில் சிறிய பைப் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூண்டுகளை குளு, குளுவென வைத்துள்ளனர். இதே போல பூங்காவில் பல்வேறு விலங்குகள் கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பூங்கா நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Related Tags :
Next Story