ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீபா, தீபக் சேர்ப்பு; சென்னை ஐகோர்ட்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அவருடைய உறவினர்களான தீபா மற்றும் தீபக் ஆகியோரை சேர்த்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கில் அவருடைய உறவினர்களான தீபா மற்றும் தீபக் ஆகியோரை சேர்த்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, 2008-09 ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில், வருமான வரித்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது.
செல்வ வரி வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரை சேர்த்தது.
மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவருக்கும் வழங்க வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.
Related Tags :
Next Story