பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர் கைது...!
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆவடி,
சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். ஆனால் மாணவி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது தாம்பரம் கடப்பேரி முத்தமிழ் நகரைச் சேர்ந்த சஞ்சய் (வயது 19) என்ற டிரைவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது மாமா வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து இன்று மாலை சஞ்சய் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story