சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்தியாவில் முதல் முறையாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடக்கிறது.
சென்னை,
44-வது பிடே செஸ் ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டியை சென்னையில் நடத்துவதற்கான ஏலத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்பதை இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து தமிழக அரசு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. நடந்துகொண்டிருக்கும் போர் சூழ்நிலை காரணமாக ரஷியாவில் இருந்து இந்த போட்டியை வெளியேற்றுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தப்பிறகு, இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற பல நாடுகள் முயற்சித்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியினால் தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்பு குழு ஒருங்கிணைப்புடன் இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு சாத்தியமானது.
200 நாட்டு வீரர்கள்
1927-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் முந்தைய 43 செஸ் ஒலிம்பியாட்டை இந்தியா ஒருமுறை கூட நடத்த வாய்ப்பு அமையவில்லை. 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022-க்கான ஏலத்தை வென்றதில் தமிழக அரசு மகிழ்ச்சியடைகிறது. இந்த போட்டியில் 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி உத்தேசமாக ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை சென்னையில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவின் செஸ் தலைநகரான சென்னையில் நடைபெற இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இது தமிழகத்துக்கு பெருமையான நிகழ்வு. உலகெங்கிலும் இருந்து வரும் ராஜாக்களையும், ராணிகளையும் சென்னை நகரம் அன்போடு வரவேற்கிறது.

Related Tags :
Next Story