புது பொலிவு பெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்! கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரலாம்
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் பார்வையாளர்கள் வசதிக்காக விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியிலிருந்து, 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைதானம் விரிவாக்கம் செய்யப்பட்டால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ரூ.139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. மைதானத்தின் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அதே சமயம், நீர்நிலை மற்றும் நீரோட்டம் சார்ந்த இடங்களில் விரிவாக்கப் பணிகள் நடைபெற கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story