ஆரணியில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்; போலீசார் பேச்சுவார்த்தை...!


ஆரணியில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்; போலீசார் பேச்சுவார்த்தை...!
x
தினத்தந்தி 16 March 2022 3:45 PM IST (Updated: 16 March 2022 3:27 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் கல்லூரி மாணவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் படித்துவருகின்றனர்.

இந்த நிலையில இன்று கல்லூரியில் செல்வதற்காக மாணவர்கள் வழக்கம் போல் பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது பேருந்தில் அதிகபடியான கூட்டம் இருந்து உள்ளது. இதனால் ஒரு சில மாணவர்கள் படியில் தொங்கிய படி பயணித்து உள்ளனர். அப்போது பேருந்து காந்தி சாலையின் மாரியம்மன் கோயில் அருகே சென்ற போது படியில் பயணம் செய்த மாணவர்களில் ஒரு சிலர் கீழே விழுந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திடீர் என்று சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்தது சம்பவ இடத்துக்கு வந்த ஆரணி போலீசார்,மாணவர்களிம் பேச்சு வார்தை நடத்தினர்.  அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். 

இது தொடர்பாக மாணவர்கள் கூறுகையில்,

3 பேருந்தில் செல்ல வேண்டிய பயணிகளை ஒரு பேருந்தில் ஏற்றி செல்கின்றனர். இதனால் மாணவர்கள் படியில்  பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 
இது தொடர்பாக பல முறை போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் இன்றுகூட பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்கள் கீழே விழுந்து உள்ளனர் என்று தெரிவித்தனர்.

Next Story