கன்னியாகுமரி: வெடிமருந்து வெடித்து சிறுமி உயிரிழப்பு; 2 பெண்கள் கைது...!
குமரி அருகே வெடிமருந்து வெடித்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜாக்கமங்கலம்,
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே ஆறு தெங்கன்விளை பகுதியை சேர்ந்தவர் பாக்கிய ராஜன் என்ற ராஜன் (40).கூலி தொழிலாளி. இவரது மனைவி பார்வதி. இந்த தம்பதிகளுக்கு தேன்மொழி (13) வர்ஷா (10 ) என்று ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.
ராஜன் அனுமதியின்றி வீட்டில் வைத்து அவ்வப்போது பட்டாசுகள் தயாரிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. பட்டாசு தயாரிப்பதற்காக இவரது வீட்டின் முன்பு ஒரு சிறிய அறையில் வெடிமருந்து சாக்கு பையில் வைத்திருந்தார். அந்த அறையில் முயல் குட்டிகள் வளர்க்கப்பட்டு வந்ததுள்ளது.
இந்நிலையில், முயல் குட்டிகளுக்கு உணவு கொடுப்பதற்காக நேற்று இரவு 7 மணி அளவில் அந்த அறைக்கு ராஜனுடைய இளையமகள் வர்ஷா சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த அறைக்குள் இருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சிறுமி வர்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்தபோது வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த அவரது தாயார் பார்வதி மீது ஒரு கல் வந்து விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து ராஜாக்கமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி ராமலட்சுமி (65) பட்டாசு செய்வதற்காக லைசென்ஸ் பெற்று கடந்த 2012 ஆம் ஆண்டு வரையிலும் பட்டாசு செய்து வந்துள்ளார். அதன்பின்பு அந்த லைசென்சை புதுப்பிக்காமல் இருந்துள்ளார். இவர் தான் ராஜனுக்கு பட்டாசு செய்ய வெடிமருந்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தததை தொடர்ந்து மூதாட்டி ராமலட்சுமி மற்றும் அவரது சகோதரி தங்கம் (57) அகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story