சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
சென்னையில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொளுத்தும் வெயிலில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை,
வடகிழக்கு பருவமழையால் கடந்த ஆண்டு சென்னை மாநகரம் வெள்ளத்தில் சிக்கி பாதிப்புகளை சந்தித்தது. அப்போது வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கள ஆய்வு செய்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டார்.
இதையடுத்து, மழைக்காலம் என்றாலே சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும், தவிக்கும் அவலநிலையை மாற்றிடும் முயற்சியாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கையாகவும் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு சகோதரரான ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் சுற்றுச்சூழல், நகர திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளின் வல்லுனர்களை உள்ளடக்கி சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவை தமிழக அரசு அமைத்தது.
ரூ.9.81 கோடியில் பணிகள்
இந்த குழு சென்னையில் மழைநீர் தேங்கும் 561 இடங்களை முதற்கட்டமாக கண்டறிந்து அங்கு மழைநீர் வடிகால்கள் அகலப்படுத்தப்படுவதுடன் ஆழப்படுத்த வேண்டும் என்பது உள்பட அம்சங்களை உள்ளடக்கி இடைக்கால அறிக்கையை கடந்த ஜனவரி மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது.
இதையடுத்து மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மு.க.ஸ்டாலின் ஆய்வு
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட வேப்பேரி நெடுஞ்சாலையில் தமிழ்நாடு கால்டை மருத்துவக்கல்லூரி அருகே 750 மீட்டர் நீளத்துக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டிலும், திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் 790 மீட்டர் நீளத்துக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டிலும், பெரம்பூர் ஸ்டீபன்சன் சாலை-குக்ஸ் சாலையில் 880 மீட்டர் நீளத்துக்கு ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார்.
இதேபோன்று மயிலாப்பூர் ரெயில்வே நிலையம் அருகே ராமாராவ் சாலையில் 500 மீட்டர் நீளத்துக்கு ரூ.38 லட்சம் மதிப்பீட்டிலும், தேனாம்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட மந்தைவெளி பஸ்நிலையம் அருகே உள்ள தேவநாதன் தெருவில் 300 மீட்டர் நீளத்துக்கு ரூ.73 லட்சம் மதிப்பீட்டிலும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
ஆய்வு நடைபெற்ற இடங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட படங்களும், தற்போது பணிகள் எவ்வளவு திட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. எப்போது முடிவடையும். ஒப்பந்ததாரர் யார்? என்பது உள்பட விவரங்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட்டிருந்தது. இதனை மேற்கோள் காட்டி பணிகள் விவரம் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் விளக்கி கூறினர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாதவாறு சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கொளுத்தும் வெயிலில்...
மு.க.ஸ்டாலினின் இந்த ஆய்வு பணி காலை 11.30 மணி முதல் மதியம் 12.45 மணி வரை நடைபெற்றது. இந்த நேரத்தில் வெயில் கடுமையாக கொளுத்தியது. எனினும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று இப்பணிகளை பார்வையிட்டார். இது பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வகையில் அமைந்தது. ஆய்வுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தங்களது கோரிக்கை மனுவையும் அவரிடம் வழங்கினார். மேலும் அவருடன் செல்போனில் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
ஆய்வு பணியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், தாயகம் கவி, த.வேலு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.விஜயராஜ் குமார், கவுன்சிலர்கள் ஸ்ரீ ராஜேஸ்வரி, அம்பேத்வளவன் என்கிற குமாரசாமி, சரஸ்வதி, அமிர்தா வர்ஷினி, மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story