தமிழக பட்ஜெட்: அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஈபிஎஸ்-ஓபிஎஸ் ஆலோசனை
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை நடத்தினர்.
சென்னை,
2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்ட உள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாயகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சட்டசபை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் நடப்பு பட்ஜெட் தொடரை எவ்வாறு எதிர்கொள்வது, பட்ஜெட் தொடரின் போது எழுப்பவேண்டிய பிரச்சினைகள், கேள்விகள் குறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story