தூத்துக்குடி: பனை ஏறும் கருவிகளை பார்வையிட்ட கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி அருகே பனை ஏறும் கருவிகளை கனிமொமி எம்.பி பார்வையிட்டார்.
தூத்துக்குடி,
தமிழக சட்டசபையில் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்லில் வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அந்த வகையில் பனை தொழில் மற்றும் பனை பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பனை மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ. 2.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உளளது.
இதே போன்று பனை தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பனை மரம் ஏறுவதற்கான சிறந்த கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள அந்தோனியார்புரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் பனை ஏறும் கருவி செயல்படும் முறை குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கனிமொழி எம்.பி. அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
அப்போது பனை தொழிலாளி ஒருவர் பனை ஏறும் கருவியை பயன்படுத்தி பனையில் ஏறுவகை அவர்கள் பார்வைவிட்டனர். பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த பதநீரை பனை ஓலை பட்டையில் கனிமொழி எம்.பி. அமைச்சர்கள் கீதாஜீவன் மற்றும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் அருந்தினர்.
Related Tags :
Next Story