3 ஆண்டுகள் பதவியில் இருப்போம் நடிகர் கார்த்தி பேட்டி


3 ஆண்டுகள் பதவியில் இருப்போம் நடிகர் கார்த்தி பேட்டி
x
தினத்தந்தி 21 March 2022 1:31 AM IST (Updated: 21 March 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

3 ஆண்டுகள் பதவியில் இருப்போம் நடிகர் கார்த்தி பேட்டி.

சென்னை,

நடிகர் சங்க பொருளாளராக தேர்வான சான்றிதழை பெற்றுக்கொண்டு நடிகர் கார்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

“நடிகர் சங்கத்துக்கு 2015-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதும் சங்கத்தில் நிறைய மாற்றங்கள் நடந்தன. கஷ்டப்பட்டு உழைத்து சங்கத்துக்கு கட்டிடம் கட்டினோம். சங்க வளர்ச்சிக்கு நிறைய பணிகள் செய்தோம். நடிகர் சங்க கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்காதது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நடிகர் சங்க தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று இருப்பது சாதாரண விஷயம் இல்லை. 3 வருட சட்ட போராட்டத்துக்கு பிறகு இந்த வெற்றியை பெற்று இருக்கிறோம். நடிகர் சங்க கட்டிடத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. இப்போது எங்கள் பொறுப்பு கூடி இருக்கிறது. முடிந்த அளவுக்கு சங்கத்தின் வளர்ச்சிக்கு நல்லது செய்வோம். நாங்கள் எப்போது பொறுப்பு ஏற்கிறோமோ அன்று முதல் 3 ஆண்டுகள் பதவியில் இருப்போம். அதுதான் சங்கத்தின் விதி’’

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.

Next Story