தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 600-க்கு கீழ் குறைந்தது..!


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 21 March 2022 7:57 PM IST (Updated: 21 March 2022 7:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 600-க்கு கீழ் குறைந்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 600-க்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்று கொரோனாவால் எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.

96 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,13,841 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 576 ஆக குறைந்துள்ளது.

Next Story