மேட்டூர் அணை நீர்மட்டம் 104.83 அடியாக குறைவு


மேட்டூர் அணை நீர்மட்டம் 104.83 அடியாக குறைவு
x
தினத்தந்தி 22 March 2022 9:08 AM IST (Updated: 22 March 2022 9:08 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் நீர்வரத்தை காட்டியிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி மாலையில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

அதே சமயம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 948 கன அடி வீதம் வந்த தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 

நீர்வரத்தை காட்டியிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று காலையில் 104.88 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 104.83 அடியாக சரிந்தது. அணையில் தற்போது 71.22 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது.

Next Story