கோவை: பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் போலீசார்...!


கோவை: பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் போலீசார்...!
x
தினத்தந்தி 23 March 2022 5:30 PM IST (Updated: 23 March 2022 5:14 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை ஏலம் விடுவதற்காக போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஏராளமான இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த இருசக்கர வாகனங்கள் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் குவிந்து கிடக்கின்றது.

இத்தகைய இருசக்கர வாகனங்களை  யாரும் உரிமை கோராததால் இவற்றை ஏலம் விடும் முயற்சியினை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் இத்தகைய இருசக்கர வாகனங்களை ஏலம் விடுவதற்காக கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வரிசையாக போலீசார் நிறுத்தி வைத்துள்ளனர்.



Next Story