முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துபாய் பயணம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை துபாய் பயணம்
x
தினத்தந்தி 23 March 2022 5:39 PM IST (Updated: 23 March 2022 5:39 PM IST)
t-max-icont-min-icon

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை மாலை துபாய் செல்கிறார்.


துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கின்றன. மத்திய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் சார்பிலும் அங்கு அரங்கு அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில்  துபாயில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் கலந்துகொள்ள முதல் அமைச்சர் மு.க  ஸ்டாலின் நாளை மாலை துபாய் செல்கிறார்.

துபாய் கண்காட்சியில் தமிழக அரசு சார்பாக கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக, முதல் அமைச்சர் மு.க  ஸ்டாலின்  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் செல்கிறார். 

அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர்  பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது   

Next Story