'உங்களில் ஒருவன்' படித்து விட்டு தொலைபேசியில் பாராட்டிய ரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை பாராட்டியுள்ளார்
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார் .உங்களில் ஒருவன் சுயசரிதை புத்தகம் கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது
இந்நிலையில் 'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை பாராட்டியுள்ளார்
இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் .
'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி.
உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .
Related Tags :
Next Story