"குடிச்சா வாசனை வருமாடி" ஓடும் பஸ்சில் பீர் குடித்து மாணவிகள் கும்மாளம் - விசாரணை
மாணவிகள் அரசு பஸ்சில் அரசு பள்ளி சீருடையுடன் ஒரு பீரை 3 மாணவிகள் மாறி, மாறி குடிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் அரசு பஸ்சில் அரசு பள்ளி சீருடையுடன் ஒரு பீரை 3 மாணவிகள் மாறி, மாறி குடிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வளைதளங்களில் வைரலானது.
இந்த வீடியோ காட்சியில் பீர் குடிக்கும் மாணவிகளின் முகம் தெளிவாக தெரிகிறது. மேலும் ‘குடிச்சா வாசனை வருமாடி’ என மாணவிகள் கேட்டபடி ஒவ்வொருவராக குடிக்கின்றனர்.
இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளிக்கு குழந்தைகள் நல அலுவலர், செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பள்ளி மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கினார்கள். மேலும் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து அந்த பள்ளிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க அந்தந்த ஊர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்த்தால் ஊருக்கு பயந்தும், சக உறவினர்களுக்கு பயந்தும் மாணவ, மாணவியர் ஒழுங்காக படிப்பார்கள் என்றும், அரசின் இலவச பஸ் பாஸ் தான் இருக்கே என்ற ஒரு காரணத்தால் ஊரு விட்டு ஊரு வந்து படிப்பதால் தம்மை யாரும் கண்டுக்கொள்ளமாட்டார்கள் என்ற தைரியத்தில் இவர்கள் இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும், பள்ளி கல்வி துறையில் சில கடுமையான மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story