சென்னை: சாலை தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து...!


சென்னை: சாலை தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்து...!
x
தினத்தந்தி 24 March 2022 3:00 PM IST (Updated: 24 March 2022 2:46 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி லாரி விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

திருவொற்றியூர், 

சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் நோக்கி சரக்கு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது.

இந்த லாரி மஸ்தான் கோவில் அருகில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள  தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி மிகுந்த சேதம அடைந்தது. பின்னர், இது குறித்து அறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

அப்போது தென்காசியை சேர்ந்த லாரி டிரைவர் அரிகரன் (வயது 30) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  



Next Story