தொழில் பூங்கா அமைக்க நிலம்; வலுக்கட்டாயமாக கைப்பற்றுவது அரசின் நோக்கமல்ல - அமைச்சர் தங்கம் தென்னரசு
தொழில் பூங்கா அமைக்க விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக நிலத்தை கைப்பற்றுவது அரசின் நோக்கமல்ல என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு சட்டசபையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய, தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், ஒசூர் அருகே ஏற்கனவே 3 சிப்காட்கள் உள்ள நிலையில் 4-வது சிப்காட் அமைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்றும் 5,000 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளதால் விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் பூங்கா அமைப்பது அரசின் அவசியமாக இருப்பதாக குறிப்பிட்டார். தொடர்ந்து விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் கூறினார்.
மேலும் தொழில் பூங்கா அமைக்க விவசாயிகளிடம் வலுக்கட்டாயமாக நிலத்தை கைப்பற்றுவது அரசின் நோக்கமல்ல என்று தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை கொடுக்க தொழில்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story