ஜே.சி.பி வைத்து வாழைகள் அகற்றம் - பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை...!
தேனி அருகே நீர்நிலை ஆக்கரமிப்புகளை ஜே.சி.பி எந்திரம் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.
தேனி,
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே 45 ஏக்கர் பரப்பளவு கொண்ட செங்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயிக்கு மஞ்சளாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்படுகின்றது. இந்த நீரின் மூலம் சுமார் 50 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றது.
இத்தகைய கண்மாயை கடந்த 40 ஆண்டுகளாக அப்பகுதியினர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பு குறித்து செங்குளம் பாசன விவசாயிகள் பலமுறை புகார் கொடுத்ததாக கூறப்படுகின்றது.
தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில் செங்குளம் கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர். அப்போது செங்குளம் கண்மாயில் 20 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவுகளை ஆக்கிரமித்து இருந்த கரும்பு, வாழை, கொய்யா போன்றவற்றை ஜே.சி.பி எந்திரம் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர்.
Related Tags :
Next Story