ராமநாதபுரம்: காதலனை கட்டிப்போட்டு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 26 March 2022 2:54 AM IST (Updated: 26 March 2022 3:56 AM IST)
t-max-icont-min-icon

காதலனை கட்டிப்போட்டுவிட்டு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலன் ஹரிகிருஷ்ணனுடன் ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் கடற்கரைக்கு சென்றிருந்தார்.

அப்போது, அங்கி இருந்த 3 பேர் ஹரிகிருஷ்ணனை கட்டிப்போட்டுவிட்டு அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், ஹரிகிருஷ்ணன் மற்றும் அவரது காதலியிடம் இருந்து நகை, பணத்தையும் திருடி சென்றனர்.

தனது காதலில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால் மனமுடைந்த ஹரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, ஹரிகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டிஸ்பி-யிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதை தொடர்ந்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளான 3 பேரையும் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் மூவரும் கமுதி, திருச்சுழி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் போது குற்றவாளிகள் தாக்கியதில் சிறப்பு எஸ்.ஐ நவநீதகிருஷ்ணன் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Next Story