கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 March 2022 1:13 AM IST (Updated: 29 March 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் ஊற்றி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று விவசாயிகள் வந்தனர். அவர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று கூறி திடீரென பால் மற்றும் மோரை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறுகையில், கால்நடை தீவனங்கள் மற்றும் இடுபொருட்கள் விலை அதிகரித்து உள்ள நிலையில் பாலுக்கு தற்போது கொடுத்து வரும் கொள்முதல் விலையை காட்டிலும் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும். மேலும், ஆவின் நிர்வாகம் கால்நடைகளுக்கு வரக்கூடிய நோய்களை தடுக்க, கொள்முதல் மையங்கள் மூலம் மருத்துவ முகாம் நடத்துவது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விவசாயிகளின் குறைகளை தீர்க்க பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகம் மூலம் மாதம் ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்றனர்.

Next Story