கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு: திருமணமான 15 நாட்களில் புது மணப்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை...!
தர்மபுரி அருகே திருமணமான 15 நாட்களில் புது மணப்பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்.
காரிமங்கலம்,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சோமனூர் பகுதியைச் சேர்ந்த கவுரப்பன் மகன் மதன்குமார் (வயது35) என்பவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த சரசு மகள் பிரியங்கா (31) என்பவருக்கும் இடையே கடந்த 16-ம் தேதி வெள்ளிச்சந்தை பெருமாள் கோவிலில் திருமணம் நடந்தது.
திருமணமான முதல் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 25-ம் தேதி பிரியங்கா தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்த நிலையில் அவரது சகோதரர் கதவை உடைத்து காப்பாற்றியுள்ளார். இந்நிலையில் காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு இருவரும் நேற்று விருந்திற்காக வந்துள்ளனர். அப்போது நேற்று இரவு புதுப்பெண் பிரியங்கா திடீரென வீட்டின் மாடியில் இருந்து குதித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்கு பதிவு செய்து, புது மணப்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமாகி 15 நாட்களுக்குள் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story