திருவாரூரில், 7-ந்தேதி ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு
மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு நுழைவு தேர்வு: திருவாரூரில், 7-ந்தேதி ம.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் வைகோ அறிவிப்பு.
சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த கல்வி ஆண்டு முதல் இளநிலை படிப்புகளில் சேருவதற்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 20-ந்தேதியன்று அறிவித்துள்ளது. இதன்மூலம் ஏழை-எளிய மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பு தடுக்கப்படும். சமூக நீதிக்கு எதிரான இந்த பொது நுழைவுத் தேர்வை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து, மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வுக்கு எதிராக ம.தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் மத்திய பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் திருவாரூரில் வருகிற ஏப்ரல் 7-ந் தேதி (வியாழக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
திருவாரூர் மாவட்ட பொறுப்பாளர் ப.பாலச்சந்திரன் தலைமையில், இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாணவர் அணி செயலாளர் பால.சசிகுமார் ஆகியோரது ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அரசியல் ஆய்வு மைய செயலாளர் மு.செந்திலதிபன் சிறப்புரை ஆற்றுவார். தஞ்சை மண்டல கட்சியினர், அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story