பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் வசூல்வேட்டை: தி.மு.க.வில் ஆணாதிக்க செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்


பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் வசூல்வேட்டை: தி.மு.க.வில் ஆணாதிக்க செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
x
தினத்தந்தி 1 April 2022 12:26 AM IST (Updated: 1 April 2022 12:26 AM IST)
t-max-icont-min-icon

பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் வசூல்வேட்டை: தி.மு.க.வில் ஆணாதிக்க செயல்பாட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் வீடு கட்டும் உரிமையாளர்களை மிரட்டும் பணியில் ஒரு தி.மு.க. பெண் கவுன்சிலர், தனது கணவர் மூலம் ஈடுபட்டு இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கின்றது.

இதேபோல், தாம்பரம் மாநகராட்சியின் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவரது மைத்துனர் உணவுக்கடைக்கு சென்று ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என்று மிரட்டி கடையை அடித்து நொறுக்கியுள்ளார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் செய்யும் வசூல்வேட்டை மற்றும் தி.மு.க.வினரின் இதுபோன்ற ஆணாதிக்க செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பும், கடமையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உண்டு.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story