இட ஒதுக்கீட்டை அடைய எந்த பாதையிலும் பயணிக்க தயாராக இருப்போம் தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீ்ட்டை அடைய எவ்வகையான பாதையிலும் பயணிக்க தயாராகவே இருப்போம் என்றும் தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்திருந்தால் அது நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்து இருக்கும். நாம் அனைவரும் கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்திருப்போம். ஆனால், தீர்ப்பு நமது எதிர்பார்ப்புக்கு மாறாக வந்திருக்கிறது. இது மகிழ்ச்சியளிக்கும் தீர்ப்பு அல்ல என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு இது வருத்தப்பட வேண்டிய தீர்ப்பு இல்லை என்பதும் உண்மைதான்.
இன்னும் கேட்டால் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, ஒற்றை சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவது சரியானது தான் என்பன உள்ளிட்ட உரிமைகளை இந்த வழக்கின் மூலம் வென்றெடுத்துக் கொடுத்துள்ளோம்.
அடுத்தக்கட்ட போராட்டம்
முதுமை எவ்வளவுதான் என்னை வாட்டினாலும், கோலூன்றி நடந்தாலும் நான் இறுதி வரை இந்த ஊமை சனங்களுக்காக போராடி என் உயிரை விடுவேன் என்று எனது முத்துவிழாவில் நான் வாக்குறுதி அளித்திருந்தேன். இப்போது எனக்கு 83 வயது தான். கோலூன்றி நடக்கும் நிலை வந்தாலும் கூட இந்த ஊமைசனங்களுக்காக போராடுவேன் என்று கூறிய நான், கொடி பிடித்து முழங்கும் வயதில் சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுக்க மாட்டேனா? போராடாமல் என்னால் இருக்க முடியுமா?.
நாம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நிச்சயமாக வென்றெடுப்போம். அதற்கான வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காகத்தான் சென்னையில் பா.ம.க. அவசர செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படவிருக்கும் முடிவின்படி சமூகநீதிக்கான நமது அடுத்தக்கட்ட போராட்டம் தொடங்கும்; அது வெற்றியில் முடியும்.
மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு
அதற்கும் முன்பாக இன்னொரு உண்மையையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். வன்னியர்கள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், நம்முடன் இணைந்து தமிழக அரசும், மூத்த வழக்கறிஞர்களை அமர்த்தி வாதிட்டது. இப்போதும் கூட சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டை கடந்து தேசிய அளவில் சமூகநீதியை பாதுகாப்பதற்கான கூட்டமைப்பு ஒன்றை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியிருக்கிறார்.
இரு வாரங்களுக்கு முன்பு தான் அவரது முயற்சிக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்தேன். தேசிய அளவில் சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அவரது ஆட்சியின் கீழ் இருக்கும் தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும், அக்கறையும் இருக்காதா? அதனால், போராட்டம் நடத்தாமலேயே வன்னியர் இட ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. நமது இலக்கு வன்னியர் இட ஒதுக்கீடுதான். அதை அடைய எவ்வகையான பாதையிலும் பயணிக்க தயாராகவே இருப்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story