கோயம்புத்தூர்: தடுப்பு சுவரை உடைத்து வனப்பகுதிக்குள் பாய்ந்த கார்...!


கோயம்புத்தூர்: தடுப்பு சுவரை உடைத்து வனப்பகுதிக்குள் பாய்ந்த கார்...!
x
தினத்தந்தி 3 April 2022 6:45 PM IST (Updated: 4 April 2022 12:25 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே தடுப்பு சுவரை உடைத்து வனப்பகுதிக்குள் பாய்ந்த காரால் பரபரப்பு.

வால்பாறை, 

சென்னையை சேர்ந்த கார்த்திக்(வயது 40) என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் வால்பாறைக்கு சுற்றுலா சென்று உள்ளார். இவர்கள் வால்பாறையை  சுற்றிப்பார்த்து விட்டு இன்று மதியம் காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த கார் வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் சாலையோர தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் கார் பாய்ந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற வாகன ஓட்டிகள் விரைந்து வந்து காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த  காடம்பாறை போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story