23 பேருக்கு கொரோனா சென்னையில் பாதிப்பு 10-க்கு கீழ் குறைந்தது
தமிழகத்தில் நேற்று புதிதாக 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்பு 10-க்கு கீழ் குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நேற்று புதிதாக 23 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 9 பேர், பெண்கள் 14 பேர் உள்பட 23 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் பாதிப்பு 10-க்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருவாரூர், தூத்துக்குடியில் தலா 2 பேர் உள்பட 11 மாவட்டங்களில் மட்டும் தொற்று பதிவாகியுள்ளது.
12 வயதுக்கு உட்பட்ட 8 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 5 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஒருவர்கூட இத்தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும் 10 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளன. இதுவரை 34 லட்சத்து 52 ஆயிரத்து 910 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பு இல்லை
தமிழகத்தில் தொடர்ந்து 17-வது நாளாக நேற்று கொரோனாவால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை. இதுவரை 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நேற்றைய நிலவரப்படி 275 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 49 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
32 பேர் கொரோனா நோயில் இருந்து பூரணமாக குணமடைந்து நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 12 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், கோவையில் 3 பேரும் அடங்குவர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 14 ஆயிரத்து 610 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 72 ஆயிரத்து 903 படுக்கைகள் காலியாக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story