அந்தியோதயா, சிலம்பு விரைவு ரெயில்கள், அதிவிரைவு ரெயில்களாக மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
அந்தியோதயா, சிலம்பு விரைவு ரெயில்கள், அதிவிரைவு ரெயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கோவில்பட்டி- துலுக்கப்பட்டி இடையே இரட்டை ரெயில் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாம்பரம் - நாகா்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில்கள் தமிழ்ப் புத்தாண்டு ஏப்ரல் 14- ந் தேதி முதல் அதிவிரைவு ரெயில்களாக மாற்றம் செய்யப்படுகின்றன.
இந்த ரயில் வண்டி எண்கள் 16191/16192 என்பதற்குப் பதிலாக 20691/20692 என மாற்றப்படுகின்றன. தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரெயிலின் (20691) கால அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி இந்த ரெயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் ஆகிய ரெயில் நிலையங்களில் முறையே காலை 7.40, 9, 9.55, 11.05, பிற்பகல் 12.35, 1.10 மணிக்குப் பதிலாக காலை 7.20, 8.25, 9.10, 9.55, 11.20, 11.58 மணிக்கு புறப்பட்டு நாகா்கோவிலுக்கு பிற்பகல் 2.20 மணிக்கு பதிலாக பிற்பகல்12.50 மணிக்கு சென்று சேரும்.
மறுமாா்க்கத்தில் நாகா்கோவில் - தாம்பரம் அதிவிரைவு ரெயில் (20692) கோவில்பட்டி, விருதுநகா், மதுரை ரயில் நிலையங்களிலிருந்து முறையே மாலை 6.15, 6.40, இரவு 7.50 மணிக்கு பதிலாக மாலை 5.55, 6.35, இரவு 7.45 மணிக்கு புறப்படும்.
இதைபோல சென்னை - செங்கோட்டை - சென்னை சிலம்பு வாரம் மும்முறை சேவை விரைவு ரெயில்கள், அதிவிரைவு ரயில்களாக மாற்றப்படுகின்றன. இந்த ரெயில்களின் வண்டி எண்களும் 16181/16182 என்பதற்குப் பதிலாக 20681/20682 என மாற்றப்படுகின்றன.
அதன்படி ஏப்ரல் 15 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்படும் சென்னை - செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரெயில் (20681) திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூா், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 2.10, 2.55,.3.30, 3.38, 4.05, 4.40, 5.20, காலை 6, 6.16, 6.25, 6.40, 6.55, 7.20, 7.35, 7.50, 8.20 மணிக்கு பதிலாக அதிகாலை 2, 2.47, 3.20, 3.27, 3.54, 4.22, 5.02, 5.35, 5.52, காலை 6, 6.15, 6.30, 6.55, 7.10, 7.25, 8.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில்கள் 10 நிமிடங்கள் முன்னதாக செங்கோட்டைக்கு காலை 8.45 மணிக்கு சென்று சேரும்.
மறுமாா்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து ஏப்ரல் 16 ஆம் தேதியில் இருந்து புறப்படும் செங்கோட்டை - சென்னை சிலம்பு அதிவிரைவு ரெயில் (20682) திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 11.55, அதிகாலை 1.25, 2.35, 3.55, 4.25, 4.45 மணிக்கு பதிலாக இரவு 11.40, அதிகாலை 1.12, 2.10, 3.30, 4, 4.20 மணிக்கு புறப்படும். இந்த ரயில் சென்னை எழும்பூருக்கு 30 நிமிடங்கள் முன்னதாக அதிகாலை 4.55 மணிக்கு சென்று சேரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story