தண்ணீர் தேடிவந்த யானை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சோகம்....!


தண்ணீர் தேடிவந்த யானை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சோகம்....!
x
தினத்தந்தி 4 April 2022 5:45 PM IST (Updated: 5 April 2022 11:27 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே தண்ணீர் தேடிவந்த யானை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம், 

சேலம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக வன எல்லையில் லக்கம்பட்டி என்ற ஊர் அமைந்து உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் திறந்த வெளி கிணறுகள் அமைத்து விவசாயிகள் விவசாயம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த சுமார் 15 வயது உடைய ஆண் யானை ஒன்று அங்கிருந்த  50 அடி விவசாய கிணற்றில் சறுக்கி விழுந்தது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு மேட்டூர் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றுக்குள் விழுந்து கிடந்த யானையை கிரேன் உதவியுடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அந்த யானை உயிரிழந்துவிட்டது. 

Next Story