ராமநாதபுரம்: பாம்பன் குந்துகால் பகுதியில் பலத்த மழை...!


ராமநாதபுரம்: பாம்பன் குந்துகால் பகுதியில் பலத்த மழை...!
x
தினத்தந்தி 6 April 2022 3:30 PM IST (Updated: 6 April 2022 3:21 PM IST)
t-max-icont-min-icon

பாம்பன் குந்துகால் பகுதியில் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.

பாம்பன்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருந்து வருகின்றது.  இந்த நிலையில் பாம்பன் குந்துகால் பகுதியில்  1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பகல் நேரமே மாலை 6 மணி போல் இருள் சூழ்ந்து காட்சி அளித்தது. 

இதனால் ஆழ்கடல் மீன்பிடி துறைமுக தளத்தில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பாம்பன் குந்துகால் பகுதியில் பலத்த மழை பெய்த நிலையிலும் பாம்பன் நகர் மற்றும் ராமேசுவரம் பகுதியில் மழை இல்லை.

இதே போன்று பாம்பன் பாலம் பகுதியில் மழை பெய்வது போன்று கருமேகக் கூட்டங்கள் திரண்டிருந்தனர். இதனால் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.




Next Story