உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது


உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது
x
தினத்தந்தி 7 April 2022 1:59 PM IST (Updated: 7 April 2022 3:50 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம்,

மகளிருக்கான திட்டங்களை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் விழுப்புரத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

கடந்த அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், மானிய விலையில் இருசக்கர வாகனம், மகளிருக்கான ஊக்கத்தொகை, மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவற்றை திமுக அரசு ரத்து செய்ததாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவருடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story