திருவாரூர்: போராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த செவிலியர்கள்


திருவாரூர்: போராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த செவிலியர்கள்
x
தினத்தந்தி 7 April 2022 3:43 PM IST (Updated: 7 April 2022 3:43 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு செவிலியர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.

திருவாரூர்,

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் மற்றும் ஈசிஜி டெக்னீசியன்கள் கடந்த 31 ஆம் தேதி முதல் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திருவாரூரிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பாக செவிலியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட புவனேஸ்வரி மற்றும் சந்தியா ஆகிய இரு செவிலியர்கள் இன்று அதிகாலை திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.


Next Story